பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

320

தெரிவித்துள்ளார். சகம் 1685-ஆம் ஆண்டில், அதாவது கி. பி. 1763-ஆம் ஆண்டில்- தமிழ் சித்திரபானு ஆண் டில் -மாசித் திங்கள் சிவராத்திரி வழிபாடு நிகழ்ந்த ஒரு வெள்ளிக்கிழமையில், சிதம்பரத்தில் திருக்கோயி லில் இந்நிகண்டு அரங்கேற்றம் செய்யப் பெற்றதாம். எனவே, ஆசிரியரின் காலம் பதினெட்டாம் நூற். ருண்டு என்பது தெளிவு.

மேலும், சூடாமணி இயற்றிய மண்டல புருடர், உரிச்சொல் நிகண்டு செய்த காங்கேயர், அகராதி நிகண்டு எழுதிய இரேவண சித்தர், கயாதர நிகண்டு பாடிய கயாதரர் ஆகியோர் கூறியவற்றையெல்லாம் தொகுத்து அரும் பொருள் விளக்க நிகண்டாகத் தாம் இயற்றியதாக ஆசிரியரே பாயிரத்தில் கூறியுள்ளார். ஆகவே, அவர்கட்கெல்லாம் பிற்பட்டவர் இவர் என்ப தும், எனவே, இவர் பதினெட்டாம் நூற்ருண்டின் இடைப் பகுதியிலும் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர் என் பதும் புலப்படும்.

நூல் அமைப்பு

நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்னும் சொற்பொருள் கூறும் தொகுதி யின் விரிவான விளக்கமே இங்கிகண்டு. அதாவது, திவாகரம், சூடாமணி நிகண்டு போன்றவற்றிலுள்ள பதினேராவது தொகுதி ஒன்றைப்பற்றி மட்டுமே இங் நிகண்டு விரிவாகப் பேசுகிறது.

இந்நூல் எளிதில் கெட்டுரு செய்வதற்கேற்ற விருத்தப் பாவால் ஆனது. மொத்தம் 700 பாக்கள் உள்ளன. ஏறக்குறைய 3200 சொற்கட் குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. உரிச்சொல் நிகண்டு