பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321

321

கயாதர நிகண்டு முதலிய நிகண்டுகளில் பொருள் கூறப்பட்டுள்ள சொற்களின் எண்ணிக்கையை நோக்க, இந்நிகண்டில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையாகிய 3200 என்னும் தொகையளவு பன்மடங்கு பெரியது என்பதை நிகண்டு ஆராய்ச்சி யாளர் அறிவர்.

ஆசிரியர் இந்ங்கண்டினைப் பின்வரும் பதினெட் டுத் தொகுதிகளாகப் பிரித்துள்ளார் :

1. ககர வெதுகை 10. மகர வெதுகை 2. ங்கர வெதுகை 11. யகர வெதுகை 3. சகர வெதுகை 12. ரகர வெதுகை 4. ஞகர வெதுகை 13. லகர வெதுகை 5. டகர வெதுகை 14. வகர வெதுகை 6. ணகர வெதுகை 15. ழகர வெதுகை 7. தகர வெதுகை 16. ளகர வெதுகை 8. நகர வெதுகை 17. றகர வெதுகை 9. பகர வெதுகை 18. னகர வெதுகை

இரண்டாவது எழுத்து ஒத்திருப்பது எதுகை யாகும். அதாவது, ஒரு செய்யுளில் உள்ள நான்கு அடி களிலும் இரண்டாவது எழுத்து ஒன்ருக இருக்கு மால்ை அதற்கு எதுகை என்பது பெயர். எடுத்துக் காட்டாக இந்நிகண்டின் முதல் செய்யுளிலுள்ள நான்கு அடிகளின் தொடக்கங்களைப் பார்ப்போம் :

" அகவலே......

தகவறி......

பகவதி......

முகவுமா...... மேலுள்ள நான்கு அடிகளிலும் க என்பதே இரண் டாவது எழுத்தாக உள்ளதை நோக்குக. இப்படியாக,