பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

322

க், க,கா, கி, கீ முதலிய ககர இன எழுத்துக்களே இரண் டாவதாக உடைய சொற்கள் எல்லாம் ககர எதுகை' என்னும் தொகுதியில் அடக்கப்பட்டன. ச், ச, சா, சி, சீ முதலிய சகர இனத்து எழுத்துக்களை இரண்டாவதாக உடைய சொற்கள் சகர எதுகை என்னும் தொகுதி யில் அடக்கப்பட்டன. இவ்வாறே 'க' தொடங்கி ன' வரையும் உள்ள பதினெட்டு இன எழுத்துக்களுக்கும் பதினெட்டு எதுகைத் தொகுதிகள் கொடுக்கப்பட் டுள்ளன. நாம் ஏதாவது ஒரு சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமாயின், அச்சொல்லின் இரண்டாம் எழுத்து என்ன என்று நோக்கி, அந்த எழுத்துக்குரிய தொகுதியில் சென்று தேடினல், அது கிடைத்துவிடும். இந்த வசதிக்காகவே எதுகை முறையில் சொற்கள் அமைக்கப்பட்டன. சொற்களை விரைந்து எளிதில் கண்டுபிடிக்க உதவவல்லது அகராதி முறையே யாகும்; அந்தத் துறையில் முன்னேடியாக எழுந்த முதல் முயற்சியே இந்த எதுகைமுறை அமைப்பாகும்.

அரும்பொருள் விளக்க நிகண்டின் எதுகை அமைப் பில் ஒரு சிறப்பு உள்ளது. சூடாமணி நிகண்டில் சொற்கட்குப் பொருள் கூறும் பதினேராவது தொகுதி யும் இந்நிகண்டு போலவே எதுகை முறையில் அமைக் கப்பட்டதாகும். ஆனல் அச்சூடாமணியில் ஒர் எது கைச் சொற்களுக்கிடையே வேறு எதுகைச் சொல் கலந்துள்ளது. காட்டாக, அதன் முதல் செய்யுளில், பகவன், பகல், மகரம், அகம் என்னும் ககர எதுகைச் சொற்களோடு வசி' என்னும் சகர எதுகைச் சொல்லுக் கும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப்படியே மற்ற எதுகைகளோடும் வேறு எதுகைகள் அந்நிகண்டில் கலந்துள்ளன. எனவே,குறிப்பிட்ட ஒரு சொல்லை இன்ன