பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327

327

மாதிரிக்காக, சகர எதுகைத் தொகுதியின் முதற். பாடலையும் இறுதிப் பாடலையும் காண்பாம் :

(சகர எதுகை - முதற் பாடல்)

' கொலைகிளர்ந் தொளிருஞ் செய்ய

கூரிலே வடிவேற் ருங்கு

மலைசெறி கடகத் திண்டோள்

மஞ்ஞைவா கனத்தெம் பெம்மான்

முலைமுகிழ்க் குறமின் கேள்வன்

மூவிரு முகனைப் போற்றிக்

கலைவலோர் புகழ் சகார

எதுகையின் கவியைச் சொல்வாம்.”

(சகர எதுகை - இறுதிப் பாடல்)

' வழுவில வொலிசி றக்கும்

வல்லின மாஞ் சகார

மொழியெது கையினிற் செய்யுள் மூவொன்ப தாகச் செய்தான்

கழுதுண அசுரர் சேனைக்

கடருெலை குகனைப் போற்றும் அழகியற் செந்தின் மேவும்

அருமருந் தையன் ருனே.”

சகர எதுகைத் தொகுதியில் மொத்தம் இருபத் தொன்பது பாடல்கள் உள்ளன. ஆனல் இறுதிப் பாடலில், மூவொன்பதாகச் (3x9=27) செய்தான்' என இருபத்தேழு பாடல்களே குறிக்கப்பட்டுள்ளன. உண் மைதான் ! சகர எதுகைச் சொற்களுக்குப் பொருள் கூறும் இருபத்தேழு பாடல்களுடன், முருக வணக்கப்