பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

328

பாடலாகிய முதற் பாடலும், பாடல் எண்ணிக்கையும் ஆசிரியர் பெயரும் கூறும் இறுதிப் பாடலும் சேர (27+1+1=29) மொத்தம் இருபத்தொன்பது பாடல்கள் ஆகும். இவ்வாறே ஒவ்வோர் எதுகைத் தொகுதி யிலும் ஆசிரியர் கூறியுள்ள எண்ணிக்கையோடு மேலும் முதற் பாடல், இறுதிப் பாடல் ஆகிய இரண்டு எண்ணிக்கையைச் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

இனி, சொற் பொருள் கூறும் நூற்பாடல்களின் மாதிரிக்காக, ககர எதுகையின் முதற் பாடலும் னகர எதுகையின் இறுதிப் பாடலும் வருமாறு:

(ககர எதுகை)

" அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரியம் முப்பேர் ;

தகவறி வுடனெழுக்கம் தெளிவும் சற்குணமும் சாற்றும் ; பகவதி உமையே துர்க்கை தருமதே வதைப்பேர் பன்னும் ; முகவுமாளிகை முகப்பே மொள்ளுதல் காந்திக்கும்பேர்.”

இப் பாடலில் அகவல், தகவு, பகவதி, முகவு என் ஆணும் சொற்களின் பொருள்கள் தரப்பட்டுள்ளன.

[னகர எதுகை)

" மன்றமே தெருட்சி மெய்ம்மை வாசம் அம்பலமே வீதி

நின்றகல் யாணத்தோடு வெளியென நிகழ்த்தும் ஏழ்பேர்; கன்றுகை வளையே அற்பம் காட்டிய இளமை குட்டி; நன்றே உத்தமத்தி மைம் நல்லறந் தானும் ஆமே.”

இந்தப் பாடலில் மன்றம், கன்று, கன்று என்னும் சொற்கட் குரிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ககர எதுகைப் பாடலில், அகவல் என்னும் சொல்லுக்கு