பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

329

மூன்று பொருள்கள் உண்டென ' முப்பேர் ' என்று

எண்ணிக்கையிட்டும், னகர எதுகைப் பாடலில் மன்றம்

என்னும் சொல்லுக்கு ஏழு பொருள்கள் உண்டென

  • ஏழ்பேர்' என எண்ணிக்கையிட்டும் ஆசிரியர் கூறி

யுள்ளமை காண்க. இவ்வாறே நூல் முழுவதும் ஆங்

காங்கே பல சொற்களின் பொருள்களை எண்ணிக்கை

யிட்டுக் கூறியுள்ளார் ஆசிரியர்.

நூற்பயன்

அரும்பொருள் விளக்க நிகண்டின் இறுதிப் (700-

ஆம்) பாடலில், நூலைப் படிப்பதனால் உண்டாகும்

பயன் ஆசிரியரால் கூறப்பட்டிருப்பது ஒரு புதுமை.

இந்நிகண்டைக் கற்பவர்கள் சிறந்த புலமையும் செல்வ

மும் பெற்றுப் பெருமையுறுவராம். அப்பாடல் வருக:-

4் இருமையொன் றியதிருச் செந்தில் முருகோனை யேத்தும்

அருமருந்தையன் சொற்ற அரும்பொருள் விளக்கம் கற்றார்

பொருமுரண் டெறப்படுத்தும் புலமைநாற் றி றம் விளக்கும்

திருமருங் குறப்பொருத்தும் செருக்குட னிருப்பர் தாமே,”