பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335

பொதிகை நிகண்டு

இந்நூலுக்குப் பொதிகை நிகண்டு எனப் பெயர் வந்ததின் பொருட்டு புலப்படவில்லை. இதன் ஆசிரி யர் பொதிகைமலைச் சீமையாகிய திருநெல்வேலிமாவட் டத்தைச் சேர்ந்தவர் ஆதலின், அம்மலையைச் சிறப்பிக் கும் வாயிலாக இப்பெயர் அமைக்கப்பட்டதோ!

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் சாமிநாதக்கவிராயர். இவர் சுருக்கமாகச் சாமி கவிராசன் எனவும் அழைக்கப்படுவார். ஆசிரியர் கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரினர்; சைவ வேளாளர். இவர் மகன் பூவைப் புராணம், நாம தீப நிகண்டு ஆகியவற்றின் ஆசிரியராகிய சிவ சுப்பிரமணியக் கவிராயர் என்பவர்.

பொதிகை நிகண்டே யன்றி, ஆசிரியர் தம் பெய ரால் சாமிநாதம் என்னும் இலக்கண நூல் ஒன்றும் இயற்றியுள்ளார். இதனை அந்நூலின் பாயிரப் பகுதி யாகிய,

  • பூமிசைப் பன்மொழியின் வேங்கடமுக் கடற்குட்

புணர் தமிழைந் தியல் நிகண்டாய்ந் தார்எளிதி னுணரத் தோமின் முன்னுரல் வழியொருநூல் வேண்டுமெனத் துறைசைச் சுடர்மணி சுப்பிரமணியக் குருமணி பார்த்தருள ஆமிதெனக் குருபதமும் திருக்குறிப்பும் தலைக்கொண் டகத்தியனைச் சிவசுப்ர மணியனென ஈன்ற