பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

336

சாமிகவி ராசனதி குலத்தோன் கல்லிடையூர்ச்

சம்பனன் செய்தனன் சாமிநாதம் என்றிந்நூலே.”

என்னும் பாடலால் நன்குணரலாம். திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிக அடிகளா ரின் திருக்குறிப்புப்படி ஆசிரியர் சாமிநாதம் என்னும் இலக்கண நூல் எழுதியதாக இப்பாடலால் அறியலாம். மற்றும் ஆசிரியரின் ஊர்ப்பெயரும் மகன் பெயருங் கூட இப்பாடலால் தெரியவருகின்றன.

காலம்

இவர் மகன் சிவசுப்பிரமணியக் கவிராயர் பூவைப் புராணம் என்னும் நூலை, கொல்லம் 985-ஆம் ஆண் டில்-அதாவது, கி. பி. 1810-ஆம் ஆண்டில் இயற்றிய தாகச் சொல்லியுள்ளார். எனவே, மகன் சிவசுப்பிர மணியக் கவிராயரது காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற்பகுதி என்பது புலப்படும். ஆகவே, தந்தை சுவாமிநாதக் கவிராயரது காலம் 18-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது தெளிவு. இவர்கள் இருவரும் அப்பன் - மகன் என்பதற்குச் சான்று பகர, சிவசுப்பிர மணியக் கவிராயர் தாம் இயற்றிய நாமதீப நிகண்டின் பாயிரத்தில், என் தந்தை பொதிகை நிகண்டு என ஒரு கிகண்டு இயற்றியுள்ளார் என்னும் கருத்தில் பாடி யுளள

  • எந்தை பொதிகைநிகண் டென்ருேர்சொற் பல்பெயரே

தந்தனன்காண் பல் கூட்டஞ் சாரொருபேர்....”

என்னும் பாடற்பகுதியும் துணை புரியும்.

நூல் அமைப்பு இந்நூலில் முதல் பகுதி, இரண்டாம் பகுதி என இரு பகுதிகள் உள்ளன. முதலில் முதல் பகுதி ையப்