பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337

337

பற்றிப் பார்ப்போம்:குறுகிய அடிகள் கொண்ட ஆசிரிய விருத்தத்தாலான இது பத்துத்தொகுதிகள்உடையது. மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. முதல் ஒன் பது தொகுதிகளில் மட்டும் 14,500 சொற்கள் பேசப் பட்டுள்ளன. பத்தாவது தொகுதியில் ஏறத்தாழ 1350 சொற்கள் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நூற்பா கடையாலான இரண்டாம் பகுதியில், சொற் கட்குப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இதில் 2288 சொற்கள் உள்ளன. ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தாராதலின், அம்மாவட்டத்து வழக்குச் சொற்கள் பல இதில் இடம் பெற்றிருப்பதில் வியப் பில்லை.

குறிப்பிடத் தக்க ஒரு சிறப்பு இங்கிகண்டிற்கு உண்டு. அகராதி கிகண்டைப் போலவே அகர வரிசை யில் அமைந்துள்ளமையே அச்சிறப்பாகும். ஆனல் அகராதி நிகண்டில் அரன், அம்பிகை, அயன் என முதலெழுத்துக்கு மட்டும் அகர வரிசை கவனிக்கப்பட் டிருக்கிறது; இரண்டாம் எழுத்தாக ர, ம், ய என எழுத்துக்கள் அகர வரிசையில் இன்றித் தாறு மாருக உள்ளன. பொதிகை நிகண்டிலோ அகம், அகைத் தல், அகப்பா என முதல் எழுத்தோடு இரண்டாம் எழுத்திலும் அகர வரிசை கவனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'அ' என்னும் எழுத்தை அடுத்து ககர இனம் உள்ள சொற்கள் ஒன்றன்பின் ஒன்று கூறப் பட்டிருப்பது காணலாம். இம்முறையில் நோக்கின், அகராதி நிகண்டினும் ஒரு படி உயர்ந்தது பொதிகை கிகண்டு என்பது புலனுகும். இனி நூலின் மாதிரிக் காக ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதியிலுள்ள முதல் மூன்று நூற்பாக்கள் வருமாறு: