பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339

காம தீப நிகண்டு

காமம் என்ருல் பெயர் தீபம் என்ருல் விளக்கு பெயர்ப் பொருள் விளக்கம் செய்வதால் நாமதீப நிகண்டு எனப் பெயர் பெற்றது.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் சிவசுப்பிரமணியக் கவிராயர்;கல்லிடைக் குறிச்சி என்னும் ஊரினர்; தளிச்சேரி மடத்தைச் சார்ந் தவர்; பொதிகை நிகண்டு இயற்றிய சாமிநாதக் கவி ராயரின் மகன். இந்தச் செய்திகள், சாமிநாதக் கவி ராயர் இயற்றிய சாமிநாதம் என்னும் இலக்கண நூலின் பாயிரத்திலுள்ள

" ஆமிதெனக் குருபதமும் திருக்குறிப்பும் தலைக்கொண்

டகத்தியனைச் சிவசுப்ரமணியனென வீன்ற

சாமிகவி சாசன தி குலத்தோன் கல்லிடையூர்ச்

சம்பனன் செய்தனன் சாமிநாத மென்றிந்நூலே.” என்னும் பாடற் பகுதியானும், சிவசுப்பிரமணியக் கவிராயரே இயற்றிய காமதீப நிகண்டின் பாயிரப் பாடல்களானும் உணரப்படும். ஆசிரியர் காமதீப கிகண்டே யல்லாமல் பூவைப் புராணம் என்னும் ஒரு நூலும் இயற்றியுள்ளார்.

ஆசிரியர் பெருமை

சாமிநாதக் கவிராசர் அகத்தியரைத்தான் சிவ சுப்பிரமணியன் என்னும் பிள்ளையாகப் பெற்ருர்