பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345

வேதகிரியார் சூடாமணி நிகண்டு

இதுகுறித்து முன்னரே சூடாமணி நிகண்டு பற்றிய பகுதியில் கூறப்பட்டுள்ளது. சூடாமணி நிகண்டின் பதினேராவது தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதியே பதினேராம் நிகண்டு என்னும் பெயரில் பெருவாரியாக மக்களால் பயிலப் பட்டு வந்ததென முன்பே சொல்லப்பட்டுள்ளது. ஆனல் நாளுக்கு நாள் பெருகிவரும் சொற்களைச் சூடாமணியில் காண முடியவில்லை. இக்குறையைப் போக்கவேண்டு மெனக் களத்துார் வேதகிரி முதலியார் என்பவர் முயன் ருர். எனவே, சூடாமணியில் இல்லாத பல புதிய சொற்களைத் தொகுத்து, எதுகை முறையில் புதிதாக 290 விருத்தப் பாக்களை இயற்றி, சூடாமணி கிகண்டின் பதினேராம் தொகுதியில் முன்னமேயே இருந்த 310 விருத்தப் பாக்களின் இடையிடையே செருகி, மொத்தம் 600 பாக்கள் உடைய தனி நூலாக் கினர். அதல்ை இது, வேதகிரியார் சூடாமணி, வேதகிரி யார் நிகண்டு என்றெல்லாம் அழைக்கப்படுவதாயிற்று.

- சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியில் 1575 சொற்களே பொருள் விளக்கம் செய்யப் பெற்றுள் ளன; ஆனல் இதிலோ 2526 சொற்கள் இடம் பெற்றுள் ளன. இந்நூல் முழுவதற்கும் வேதகிரியாரே தெளி வாக உரை எழுதியுள்ளார். இது கி. பி. 1842-ஆம் ஆண்டில் யாழ்ப்பான சங்கத்தாரால் பதிப்பிக்கப் பட்டது. எனவே, ஆசிரியர் பத்தொன்பதாம் நூற்ருண் டினர் என்பது தெளிவு. இந்நூலே யன்றி மேலும்