பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353

353

எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரே பொருள் கூறிச் சென்றுள்ளார். நூலில் மொத்தம் 400 செய் யுட்கள் உள்ளன.

இந்நூலும் எதுகை முறையில் அமைந்திருப்ப தால், சொற்களை எதுகை கோக்கி விரைவில் கண்டு பிடித்துவிடலாம்.

அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு

அபிதானம் என்ருல் பெயர். பல்பொருட் பெயர் களும் சொல்லப்படுவதால் நிகண்டினை இப்பெயரால் அழைப்பதும் உண்டு. இந்நிகண்டின் ஆசிரியர் கோபாலசாமி நாயக்கர் என்பவர். இவர் கீழ்வேளுர் என்னும் ஊரினர்; வீராசாமி நாயக்கரின் மகன்.

இந்நூல் பல்லினப் பாவகையால் பாடபபட்ட தாகும். இதன் முதல் தொகுதி மட்டும் ஆசிரியர் வாழ்ந்த போதே கி. பி. 1878-ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டது. எனவே ஆசிரியர்காலம் 19-ஆம் நூற்ருண் டின் பிற்பகுதி என்பது தெளிவு.