பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

விரிவு நிகண்டு

இந்நிகண்டு, மிகப் பல சொற்கட்கும் பொருள் கூறும் விரிவான நிகண்டு என்பது விரிவு நிகண்டு’ என்னும் இதன் பெயராலேயே விளங்கும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் கா. அருணுசல காவலர் என்பவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்து வீரவநல்லூர் என்னும் ஊரினர்; இவர் மகனுகிய பூமிநாத முதலியார் என்பவர் வீரராகவபுரம் என்னும் ஊரில் பெரிய வழக்குரைஞராய் விள்ங்கிய்வர். ஆசிரியர் வீரவநல்லூரில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூமிநாதக் கடவுளைத் தெய்வமாகக் கொண்டவர்; அதனுல்தான் தம் மகனுக்குப் பூமிநாதன் என்னும் பெயரை இட்டுள்ளார். இதனை, ஆசிரியரே பாடியுள்ள விரிவு நிகண்டின் பாயிர்த்திலுள்ள, 3.

' பொன் பொலி வீரை வேணிப்

பூமி நாதன்றன் தாசன்.”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம்.

நூல் அமைப்பு இஃதும் ஒரு சொல் பல் பொருள் தொகுதி என் னும் பிரிவைச் சேர்ந்ததாகும். சூடாமணி நிகண்டின் பதினேராவது தொகுதியை முதல் நூலாகக் கொண்டு சொற்பொருள் விளக்கிச் செல்வதால் இந்நூல் 'பதினேராவது விரிவு நிகண்டு என்றும் அழைக்கப்