பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357

சில நிகண்டுகள்

வேதகிரி முதலியார் எழுதிய இலக்கியக் களஞ்சி யம் என் னும் நூலில், பொதிய நிகண்டு, ஒளவை நிகண்டு என்னும் நிகண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகண்டுக்கும் உரியதாக ஒவ்வொரு பாட லும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் வருமாறு :

பொதிய நிகண்டு

“ தட்டுநீட் டுக்குறல் தணலினின் றுருகல்

தன்னெடை குறைதலில் லாமை

கொட்டு கடின மின்மை யாணிக்குக்

கூறுமாற் றறிவித்தல் சோதி

விட்டுவிட் டொளிர்தல் மிகுபுடத் திருத்தல்

வெவ்வழல் வென்றியைக் கொள்ளல்

கட்டிசாய்த் திடுகிற் பள்ளங்கொண் டதிக

கனங்கொளல் கனகலக் கணமே.”

இப்பாடலில் பொன்னின் இயல்புகள் கூறப்பட் டுள்ளன. தட்டி நீட்டப்படல், கெருப்பில் உருகுதல், எடை குறையாமை, தட்டுவதற்குக் கடினம் இல்லாமை, உரையாணிக்கு மாற்று அறிவித்தல், விட்டு விட்டுச் சுடர் வீசுதல், புடம் போடப்படல், கெருப்பால் அழி யாமை,கண்மாயிருத்தல் ஆகியதன்மைகளை உடைமை பொன்னின் இலக்கணமாம். இப்பாடல் படிப்பதற்கு மிகவும் சுவையா யுள்ளது. இப்பொதிய நிகண்டு விருத்தப் பாவகையால் ஆனது.