பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

358

ஒளவை நிகண்டு

" ஏலம், தக்கோலம், சூடன்,

இலவங்கம், சாம்பிராணி, காலஞ்செல் அகில், சந்து, ஓங்கு

கத்துாரி, புழுகு, மெளவல், கோலமார் மருக்கொழுந்து, வெட்டி,

குங்குமம், இலாமிச்சம் வேர், சாலும் சண்பகம், சவ்வாது,

சாற்றும் சோடச வாசப்பேர்.” இப்பாடலில் பதினறு (சோடசம்) வகை வாசனைப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஒளவை என்னும் பெயருடைய யாராலாவது பாடப்பட்டதால் இக் நூலுக்கு ஒளவை நிகண்டு என்னும் பெயர் கொடுக்கப்

பட்டதோ ?

இப்படியாக நூற்றுக் கணக்கான நிகண்டு நூற்கள் தோன்றி நாளடைவில் மறைந்து விட்டன. சோழவந்தான் சண்முகம் பிள்ளையவர்களும் ஓர் அந்தாதித் தொடை நிகண்டு இயற்றினர். அகராதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் நிகண்டுகளை அறிந்தவர் எத்தனை பேர் ?