பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359

மருத்துவ நிகண்டுகள்

இதுவரை பொதுவாக மொழித்துறைக்கு உதவும் கிகண்டுகள் பலவற்றைப் பற்றிப் பார்த்தோம். இவற் றுள்ளும் பல கலைகளுக்குரிய சொற்கள் இடம் பெற் றிருத்தலைக் கண்டோம். இவையே யன்றி, மருத்து வம், வானநூல் (சோதிடம்) முதலிய கலைகளுக்காகத் தனித் தனியே சிறப்பு நிகண்டுகள் பல இருந்தன. அவற்றுள் சில கிடைக்கப்பெற்று இப்போதும் உள்ளன. பதினெண் சித்தர்கள் மருத்துவம் பற்றிப் பதினெட்டு நிகண்டு நூற்கள் பாடியுள்ளனர். எடுத் துக் காட்டாக, அகத்தியர், போகர் ஆகியோர் நிகண்டு களைப் பற்றிப் பார்ப்போம் :

அகத்தியர் நிகண்டு

பிற்கால அகத்தியரால் அருளிச் செய்யப்பட்ட இந்நிகண்டுக்கு ஏமதத்துவம், பஞ்ச காவிய நிகண்டு, பஞ்ச காவிய நிகண்டு எண்ணுறு, அகத்தியர் நிகண்டு எண்ணுாறு என்ற பெயர்களெல்லாம் வழங் கப்படுகின்றன. விருத்த யாப்பினுல் இயற்றப்பட்ட இந்நூலில், வயித்திய காண்டம், மாந்தரீக காண்டம் என்றெல்லாம் எட்டுக் காண்டங்கள் உள்ளன. ஆயிரத் துக்கு மேலும் பாடல்கள் மிக்குள்ள இங்கிகண்டுக்கு அகத்தியர் நிகண்டு எண்ணுாறு என எண்ணின் மேல் ஒரு பெயர் உள்ளதின் பொருத்தம் புலப்பட ωfl6ύ8ου.

ஆசிரியர் ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத் திலும் கடவுளை வணங்கிக் காண்டத்தின் விவரமும்