பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369

நான்காம் பாகம்

தமிழ் அகராதிகள்

அகராதிகள்

Iநிகண்டு நூற்களைப்போல் செய்யுள் வடிவில் இல்லாமல், தனித் தனிச் சொற்களை ஒன்றன் பின் ஒன்ருக அகர வரிசையில் நிறுத்திப் பொருள் கூறிச் செல்லும் நூல் அகராதி எனப்படும். இத்தகைய தமிழ் அகராதி நூற்கள் பதினேழாம் நூற்றண்டிலேயே தோன்றத் தொடங்கி விட்டன. பதினேழாம் நூற்ருண்டில் தோன்றிய இந்த அகராதிக் குழந்தை பதினெட்டாம் - பத்தொன்பதாம் நூற்ருண்டுகளில் முன்னிளமைப் பருவத்தையும் பின்னிளமைப் பருவத் தையும் கடந்து இவ்விருபதாம் நூற்ருண்டில் குமரப் பருவத்தை எட்டியுள்ளது. இன்னும் அடையவேண் டிய வளர்ச்சிகள் - பெறவேண்டிய நிறைவுகள் எவ்வளவோ உள்ளன. . -

பதினேழாம் நூற்ருண்டில் தமிழுக்குத் தமிழ் அகராதிகளும் (அதாவது, தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் அகராதிக்ளும்)