பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

370

தமிழுக்குப் போர்ச்சுகீசிய அகராதியும் தோன்றின. 18, 19, 20-ஆம் நூற்ருண்டுகளிலோ, இவற்றுடன், போர்ச்சுகீசியத்திற்குத் தமிழ் அகராதியும் (போர்ச்சு கீசியச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கொடுத் தல்), இவ்வாறே, தமிழ் - இலத்தீன் அகராதிகளும் இலத்தீன் - தமிழ் அகராதியும், தமிழ் - பிரெஞ்சு அகராதிகளும், பிரெஞ்சு-தமிழ் அகராதியும், தமிழ் - ஆங்கில அகராதிகளும், ஆங்கில - தமிழ் அகராதி களும், வடமொழி - தமிழ் அகராதியும், இந்தி-தமிழ் அகராதியும், ஆங்கிலம் - இந்தி - மராத்தி - தெலுங்கு - தமிழ் அகராதியும் மற்றும் பலவகை அகராதிகளும் தோன்றின.

இந்த நூற்ருண்டுகளில், போர்ச்சுகீசியர், பிரெஞ் சுக்காரர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்களின் ஆட்சியும் செல்வாக்கும் நம் காட்டில் நிலவியதால் அவர்தம் மொழிகளோடு பிணைந்த தமிழகராதிகள் பல தோன்றின. இருபதாம் நூற்றண்டில் ஐரோப் பியர்களின் செல்வாக்கு மங்கியதால், அத்தகைய அகராதிகள் புதியனவாகத் தோன்ற இடமில்லாது போயிற்று அந்தப் பழைய அகராதிகளும் மறுபதிப் புக்கள் பெறவில்லை. ஆனல், ஆங்கில மொழி மட்டும் இன்னும் கம் நாட்டில் நடமாடுவதால், ஆங்கிலத் தோடு தமிழ் பிணைந்த அகராதிகள் மட்டும் புதிது புதிதாகத் தோன்றுகின்றன; பழைய அகராதிகள் சிலவும் புதுப் புதுப் பதிப்புக்கள் பெற்று வருகின்றன. அது போலவே, பிரெஞ்சு மொழி நடமாடும் புதுச்சேரி யில், பிரெஞ்சோடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள், புதுவை மாதாகோயில் அச்சகத்தில் புதுப் பதிப்புக்கள் பெற்று வருகின்றன.