பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

பதினேழாம் நூற்ருண்டு அகராதிகள்

அகராதி மோனைக்கு அகராதி எதுகை

முதல் எழுத்து ஒன்றியிருப்பது மோனை என்பதும் இரண்டாம் எழுத்து ஒன்றியிருப்பது எதுகை என்பதும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அகராதி மோனைக்கு அகராதி எதுகை என்பது, சொற்களின் முதல் எழுத்தை ஒட்டிமட்டும் அகரவரிசைப் படுத்து வதை நிறுத்திக் கொள்ளாமல், இரண்டாம் எழுத்தை ஒட்டியும் சொற்களை அகரவரிசைப் படுத்திப் பொருள் கூறும் நூல் இது என்று அறியலாம். இவ்வகராதியில், சொற்பொருள் விளக்கம் செய்யுளா யில்லாவிடினும் கிட்டத்தட்ட நிகண்டு நடையில் உள்ளது.

இந்த அகராதியின் ஆசிரியர் பற்றியோ, காலம் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. இது பதினேழாம் நூற்ருண்டின் இறுதியில் தோன்றி யிருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது.

இச் சிறுநூலில் ஏறக்குறைய 7500 சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பெற்றுள்ளன. எளிய சொற்கள் பல இதில் காணப்படவில்லை. அகல்வுற்று' என்பது போன்ற எச்சச் சொற்களும், செய்பொழில்’ என்பது போன்ற தொடர்களும், காண்போதல் உற்ருர் என்பது போன்ற வாக்கிய உருவங்களும் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாம்.