பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373

373

பத்துச் சொல் அகராதி

இந்த அகராதியில், திவாகரம், சூடாமணி முதலிய நிகண்டுகளில் உள்ள சொற்கள் அகரவரிசைப் படுத் தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. இது பத்துத் தொகுதிகளை யுடையது. முதல் தொகுதியில் ஒரே எழுத்தாக உள்ள சொற்களும், இரண்டாந் தொகுதி யில் இரண்டு எழுத்துக்களா லான சொற்களும்...... இப்படியே...பத்தாக்தொகுதியில் பத்து எழுத்துக்களா லான சொற்களும் இடம் பெற்றுள்ளன. ஒரு சொல்லுக் குப் பொருள் அறியவேண்டுமாயின், அச்சொல்லில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று எண்ணிப் பார்த்து, அத்தனையாவது தொகுதியில் சென்று அக்ர வரிசைப்படி தேடினுல் மிக எளிதில் அச்சொல்லையும் பொருளையும் கண்டுபிடித்து விடலாம். ஆல்ை, பத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய சொல் லுருவங்கள் இந்த அகராதியில் இல்லை.

வைணவ விளக்கவுரை அருஞ்சொல் அகராதி

திருவாய் மொழி போன்ற வைணவத் திவ்யப் பிரபந்தங்கட்கு மணிப் பிரவாள (தமிழ்ச் சொல்லும் வட சொல்லும் கலந்த) நடையில் விரிவான விளக்க வுரை எழுதப்பட்டிருப்பது பலரும் அறிந்த செய்தி. அவ்வுரையில் உள்ள அருஞ்சொற்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ள நூல்தான் இந்த அகர்ாதி. பதின்மூன்று - பதின்ைகாம் நூற் ருண்டுகளில் பேச்சு வழக்கில் இருந்த சொற்கள் பல் வற்றை இதில் காணலாம்.