பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

374

இவ்வகராதியே யன்றி, சம்பிரதாய அகராதி என ஒன்றும் உள்ளது. வைணவச் சார்புடைய இந்தச் சம்பிரதாய அகராதி இருபதாம் நூற்ருண்டில் அச் சிடப்பட்டாலும், தோன்றிய காலம் திட்டமாகத் தெரியவில்லை.

தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி

பதினேழாம் நூற்ருண்டில் நம் நாட்டில் கிறித் துவ மதத்தைப் பரப்புவதற்காக ஐரோப்பாவிலிருந்து கிறித்துவத் துறவியர் பலர் வந்திருந்தனர். அவர்கள் இலத்தீன், போர்ச்சுகீசியம், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளை அறிந்தவர்கள். தம் மதத்தைத் தமிழ் மக்களிடையே பரப்பவேண்டுமாயின் அவர்கள் தமிழ் மொழியில் பேசில்ைதான் மக்களைக் கவர முடியும். அதற்காகத் தமிழ் கற்றர்கள்; தமிழ்ச் சொற்களை ஆராய்ந்தார்கள்; சொற்பொருள் களஞ்சிய மான அகராதிகளும் ஒரு மொழிக்கு ஒரு மொழியில் படைத்தார்கள். இவ்விதமாக ஐரோப்பிய மொழி களோடு தமிழ் பிணைந்த அகராதிகள் பல தோன்றின. தமிழ் மக்கள். ஐரோப்பிய மொழிகளை அறிந்து கொள்ளவும், புதிதாக வரும் ஐரோப்பியர்கள் தமிழ் மொழியை அறிந்து கொள்ளவும் இவ்வகராதிகள் பெருந்துணை புரிந்தன. இவற்றுள் காலத்தால் முக்தி யது தமிழ்- போர்ச்சுகீசிய அகராதியாகும்.

தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி என்பது, தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் முதலில் நிறுத்தி, அவற் றிற்கு நேரான போர்ச்சுகீசியச் சொற்களை எதிர்ப் பக்கத்தில் கொடுத்திருக்கும் அகராதியாகும். இதன்