பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34



“மன்னிய நிகண்டு சூடா மணியென ஒன்று சொல்வன் இந்நிலந் தன்னின் மிக்கோர் யாவரும் இனிது கேண் மின்.”

என்பது அப்பாடற் பகுதி சொற்பொருள் கூறும் துறையில் சூடாமணிக்குப் பின்னெழுந்த நூற்கள் பெரும்பாலன நிகண்டு என்னும் பெயருடனேயே தோன்றின. இப்படியாக, உரிச்சொல் என்னும் பெயருக்குப் போட்டியாக எழுந்த நிகண்டு என்னும் பெயர், அந்த உரிச்சொல் என்னும் பெயரை விழுங்கிவிட்டுத்தான் நிலைத்துவிட்டது.

அகராதி:

நிகண்டு நூற்கள், இக்கால அகராதிகளைப் போல் தனித்தனிச் சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்படாமல், செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன மற்றும், நிகண்டுகளில், சொற்கள் அகராதிகளைப் போல் அகரவரிசையில் அமைக்கப்படாமல் கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன. இக்கால அகராதிகளில் ஒரு சொல்லை உடனே தேடிக் கண்டுபிடித்துவிடலாம் நிகண்டுகளில் இது முடியாது; ஆனால் அகராதிகளே நெட்டுரு பண்ண முடியாது; நிகண்டுகள் செய்யுளாயிருப்பதால் எளிதில் நெட்டுரு (மனப்பாடம்) செய்துவிடலாம். அக்கால மாணாக்கர் அனைவரும் நிகண்டு கற்றனர். நிகண்டு கற்காத கல்வி அந்தக் காலத்தில் கிடையாது. கல்வித் துறையில் நிகண்டுகள் இன்றியமையா இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தன.

முன்சொல்லியுள்ளபடி, குறிப்பிட்ட ஒரு சொல்லை எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஒரு பெருங்குறை ஒரு பெருந்தொல்லை நிகண்டுக் கல்வியில்