பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

பதினெட்டாம்நூற்ருண்டு அகராதிகள்

திக்சியனரியம் தமுலிசம்

“534lucarifluub 350p603ibo Dictionarium Tamulicum) என்னும் இந்தத் தமிழ் அகராதியை, பதினெட்டாம் நூற்ருண்டில் தோன்றிய முதல் அகராதியாகக் கொள் :ளலாம். இதன் ஆசிரியர் பர்தோல்மாஸ் சியஜன் பல்க்' (Bartholmaeus ziegenbalg) groörgyib Qalgir&ruuf. GT(195Ú பட்ட காலம் கி. பி. 1712 ஆகும். இவ்வகராதி ஒன்றும் பரவியதாகத் தெரியவில்லை.

சதுர் அகராதி

ஆசிரியர் வரலாறு

சதுர் அகராதியின் ஆசிரியர் பெஸ்கி Father) 1Beschi) என்னும் மேலைப்புலக் கிறித்துவத் துறவியார். இவர் கிறித்துவ மதம் பரப்ப இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாடு போக்து கி. பி. 1710-ஆம் ஆண்டிலிருந்து

1747-வரை வாழ்ந்தார்.

இவர் தமிழ் மக்களின் உள்ளங் கவர்வதற்காகக் காவி யுடுத்துக் கால் குறடு அணிந்து புலாலும் நீத் தார்; தைரியநாதசுவாமி எனவும் வீரமா முனிவர் எனவும் அழைக்கப்பட்டார்.

இலத்தீன், போர்ச்சுகீசியம் முதலிய ஐரோப்பிய மொழிகளை நன்கறிந்த வீரமாமுனிவர் தமிழ் மொழி