பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377

377

யினையும் நன்கு க்ற்று, சதுர் அகராதி முதலிய பல

அகராதிகள் இயற்றினர்; அகராதிகளேயன்றி, கொடுக் தமிழ், தேம் பாவணி, வேதியர் ஒழுக்கம், வேத விளக்

கம், வாமன் கதை முதலிய நூல்களும் இயற்றினர்.

திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட்பாலையும்

இலத்தீன் மொழியில் பெயர்த்தார். இவருடைய படைப்

புக்களுள் மிக்க பயனுள்ளது சதுர் அகராதி'யாகும்.

இஃது எழுதப்பட்ட காலம் கி. பி. 1732 ஆகும்.

நூல் அமைப்பு

இக்காலத்தில் காணப்படும் தமிழ் அகராதிகட் கெல்லாம் முன் மாதிரியாக உள்ளது சதுர் அகரா தியே. முதல் எழுத்து அல்லது இரண்டாம் எழுத்தோடு, கின்று விடாமல் சொற்கள் கடைசி எழுத்து வரைக்கும் அகரவரிசைப் படுத்தப்பட்டு, தமிழுக்கு நேரே தமிழ்ச் சொல்லிலேயே பொருள்கூறும் முதல் அகதிரா, இதுவே ! அதல்ை, இதனை யியற்றிய வீரமாமுனிவர் *தமிழகராதியின் தந்தை' எனச் சிறப்பிக்கப் பெற்றர். இந்நூல் தமிழ் என்னும் பெருங்கடலைக் கடக்க உதவும் ஒரு மரக்கலமாகத் திகழ்கிறது என இதன் பாயிரத் தில் கூறப்பட்டுள்ளது.

சதுர் என் ருல் நான்கு என்று பொருள். இவ்வக ராதி பெயரகராதி, பொருள் அகராதி, தொகையகராதி, தொடையகராதி என்னும் நான்கு பிரிவுகள் உடைய தாதலின் சதுர் அகராதி' என்னும் பெயர் பெற்றது. பெயர் அகராதி என்னும் பிரிவில், ஒவ்வொரு சொல் லுக்கும் உரிய பலப்பல பொருள்கள் (அர்த்தங்கள்) கூறப்பட்டுள்ளன. இதில் 12000 சொற்கட்குமேல் இடம் பெற்றுள்ளன. பொருளகராதியில், சிவன், திரு மால், நிலம் போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் உரிய