பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

382

மருட்டொகை விலகெனப் பணிந்தேத்தி

வழக்கொடு புலமையோர் முன்னுரைத்த பொருட்டொகை வகைப்பட விரித்துணர்த்திப்

புகலுதுந் தொகையாக ராதியென்றே.

இறைவனை ஏத்தித் தொகையகராதியைத் தொடங்குகிறேன் என்பது கருத்து.

தொடையகராதி - காப்பு பார்முத லுலகெலாம் பணிந்தேத்தும்

பரமனைப் புகழ்ந்தடி தொடையாகச் சார்முத லெழுத்தொழித் தொருங்கொன்றித்

தருமருந் தொடைத்தலை யாகெதுகை நேர்முத லாகுறிற் பற்றிய பின்

னெடிற்றொடர் தொடைப்பதந் தொடுத்திணக்கிச் சீர்முத லொன்றொழி சிறப்பெதுகை

செப்புதுந் தொடையக ராதியென்றே.'

தெய்வத்தை இறைஞ்சி, முதலெழுத்துத் தவிர இரண்டாமெழுத்து முதலாகிய மற்ற எழுத்துக்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ள எதுகைத் தொடைச் சொற்களுக்குப் பொருள் கூறும் தொடையகராதி யைத் துவக்குகிறேன் - என்பது இப்பாடலின் பொருள்.

நூல் இறுதிப் பாடல் |

"அடைக்கல நாயகி யம் புயச் சேவடி

யுடைக்கலா மாம் பிறை யொப்பத் தோன்றிய சுத்த சதுர்த்தி சுங்கநாட் பாகுலத் தொத்த வில்லிடை யுடைகுளங் குளிப்ப மூவாட்டை யாடான் முதல்வன் கோயிற்