பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383

383

பூவாட்டி வைத்துப் புக்கன நாளென மண்ணாண்ட சாலிவாகன சகாத்தத் தெண்ணான் கைம்பது மெண்ணாறு மாறுமா

மத்திருக் கன்னிதானாதியை யீன்ற பத்துறழ் நூறெழுபது மெண்ணான் காண்டுமா மருக்காவ னீழற்கீழ் வதிந்தவ ளாளுந் திருக்காவ லூரிற் றேவதாய் துணை செய

வீரா ரியனெனும் வேதியன் தாராய் முடித்த சதுரக ராதியே.

சாலிவாகன சகம் 1654 - ஆம் ஆண்டிற்கு நேரான கி.பி. 1732- ஆம் ஆண்டில், திருக்காவலூரில் எழுந் தருளியிருக்கும் அன்னையின் அருள் கொண்டு, வீராரிய னாகிய வேதியனாகிய வீரமாமுனிவன் இயற்றிய சதுரகராதி முற்றிற்று - என்பது இப்பாடற் கருத்து. பெஸ்கியவர்கள் தமிழ் நாட்டு அந்தணர் போலத் தம்மை மாற்றிக்கொண்டதால் 'வீர ஆரியன்' என்றும் வேதியன்' என்றும் இப்பாடலில் தம்மைத் தாமே சுட்டிக்கொண்டுள்ளார்.

வீரமாமுனிவரின் உள்ளப் போக்கையும், தமிழ் முன்னோரின் மரபைத் தாமும் மதித்துப் பின் பற்றிய பான்மையினையும், புதிதாகத் தமிழ் கற்ற அவ்வெள்ளை யரின் செய்யுள் அமைப்பினையும் அறிவிக்கும் மாதிரி யாக மேலுள்ள ஆறு பாடல்களும் இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டன.

(1)

புதுமை வீரமாமுனிவர் சதுரகராதியில் தொடையகராதி என ஒரு தொகுதி அமைத்திருப்பது புதுமையானது. அதையும் குறிற்கீழ் எதுகை', 'நெடிற்கீழ் எதுகை'