பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385

385 காலம் கி.பி. 1742. இதில் 9000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இலத்தீன் - தமிழ் அகராதி இலத்தீன் சொல்லுக்கு நேரே தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் வீரமா முனிவர் (பெஸ்கி).

தமிழ் - பிரெஞ்சு அகராதி தமிழ்ச் சொல்லுக்கு நேரே பிரெஞ்சுச் சொல்லால் பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் (பெஸ்கி)

விரமா முனிவர். காலம் : கி. பி. 1744.

இந்த அகராதி மிகவும் அழகாகக் கையால் எழுதப்பட்டு, 1806 - ஆம் ஆண்டில், எழுதியதை அப்படியே படியெடுக்கும் 'சைகிளோஸ்டைல் (Cyclostyle) பொறி மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மிக மிக நீளமாகவும் அகலமாகவும் உயரமாகவும் உள்ள இந்த சைக்கிளோஸ்டைல்' பதிப்பு, பார்க்கப் பார்க்க மிகவும் நேர்த்தியாயிருக்கிறது. அவ்வளவு அழகாகப் பொறுமையுடன் எழுதிய கை யாருடையதோ? அந்த கைக்கு என்ன பரிசளிப்பது!

தமிழ் - ஆங்கில அகராதி இது, தமிழ்ச் சொல்லுக்கு நேரே ஆங்கிலச் சொல் லால் பொருள் கூறுவது. ஆசிரியர் வீரமாமுனிவர் (பெஸ்கி).

போர்ச்சுகீசியம் - இலத்தீன் - தமிழ் அகராதி

போர்ச்சுகீசியச் சொல்லுக்கு நேரே இலத்தீன் சொல்லாலும் அதனையடுத்துத் தமிழ்ச் சொல்லாலும்