பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387

387

“ [Fabricius, John Phil., and Breithaupt John Chr.] தமிழும் இங்கிலேசுமா யிருக்கிற அகராதி. A Malabar and English Dictionary, wherein the words and phrases of the Tamulian language, commonly called by Europeans the Malabar Language, are explained in English; by the English Missionaries of Madras. Printed at Wepery, near Madras, in the year MDCCLXXIX.

மேலுள்ள பகுதியில், 'தமிழும் இங்கிலேசுமா யிருக்கிற அகராதி' என்று முதலில் தமிழிலும், அடுத்து 'Malabar and English Dictionary' என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. தமிழ் மொழியை மலபார் மொழி என்று ஐரோப்பியர்கள் அழைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலபார் என்பது மலையாளம். இதனால், தமிழும் மலையாளமும் ஒன்று என்பது உறுதிப்படும். பழைய தமிழ்ச் சேரநாடாகிய மலையா ளத்தில் வழங்கிய மொழியும் தமிழ்நாட்டில் வழங்கிய மொழியும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் செவிகட்கு ஒன்றாகவே தெரிந்ததில் வியப்பில்லை. 'லீலா திலகம்' என்னும் நூலில், தூய்மை யான மலையாள மொழி பழந்தமிழ் என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

இவ்வகராதி 1779 - ஆம் ஆண்டில் சென்னை வேப் பேரியில் அச்சிடப்பட்டதாக மேலே கொடுக்கப் பட்டுள்ள பகுதியில் காணப்படுகிறது. ஆனால் அதில் 1779 என இந்திய - அரபு எண்ணால் குறிக்கப்படாமல், MD ( C LXXIX என ரோமன் எண்ணால் குறிக்கப் பட்டுள்ளது. அப்படியென்றால் 1779 என்று பொருள்.