பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

390

யடி போல்தான் தோன்றும். இம்முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வியப்பாயிருக்கிறது.

இவ்வகராதியின் தொடக்கத்தில், தமிழ் எழுத்துக் களைப் பிரெஞ்சுக்காரர் ஒலிப்பதற்கு உதவும் வகையில், ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் நேரே ஒலியொற்றுமை யுள்ள பிரெஞ்சு எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருப்ப தும் ஒரு புதுமையே.

பலவிடங்களில் தமிழ்ச் சொற்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுவது இவ்வகராதிக்கு ஒரு குறை

யாகும்.

தமிழ் - ஆங்கில அகராதி ஆங்கிலம் - தமிழ் அகராதி

தமிழுக்குத் தமிழ் அகராதி இம் மூன்றுவித அகராதிகளையும் தொகுத்து வெளியிட, யாழ்ப்பாணத்து அமெரிக்கக் கிறித்துவச் சங்கம் (American Mission at Jaffna) 1833 - ஆம் ஆண் டில் திட்டம் தீட்டியது. அச் சங்கத்தைச் சேர்ந்த 'ரெவரன்ட் ஜே. னைட் (Rev.I. Knight) என்பவர், 'கபிரியல் திசரா' (Gabriel Tissera), 'ரெவரன்ட் பீட்டர் பெர்சிவல்' (Rev. Peter Percival) ஆகியோரின் உதவி யுடன் இம்மூன்று அகராதிகளும் வெளியாவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் இடையிலேயே அவர் இறந்துவிட்டதால் இவை வெளிவராமல் நின்றுவிட்டன.

ராட்லர் தமிழ் - ஆங்கில அகராதி இது தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதியாகும். இதில் தமிழ்ச்