பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

392

பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 58,500 சொற்கட்குப் பொருள் கூறும் இவ்வகராதி சதுரகராதியினும் நான்கு மடங்கு பெரியது. இவ்வகையில் நோக்கின், தமிழுக்குத் தமிழ் அகராதிகளுக்குள் இதுவே முதல் பெரிய அகராதியாகும். இதில் சொற்களேயன்றி அவற்றின் பொருள்களும் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. சதுர் அகராதியைப் போலவே இஃதும் நான்கு தொகுதிகளையுடையது.

இது, மானுவல் தமிழ் அகராதி (The Manual Dictionary of The Tamil Language) என்றும், யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் . அகராதி (Manippay - Akarathi) என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது. 'ரெவரன்ட் லெவி ஸ் பால்டிங் (Rev. Levi Spaulding) என்பவரால் 1842 - ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப் பட்டது.

ஸ்பால்டிங் ஆங்கிலம் - தமிழ் அகராதி

ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் 'பொருள் கூறும் அகராதி யொன்று ஸ்பால்டிங் (Rev. L. Spaulding) அவர்களால் 1844- இல் உரு வெடுத்தது.

பெர்சிவல் ஆங்கிலம் - தமிழ் அகராதி வின்சுலோ , ஸ்பால்டிங் ஆகியோரைப் போலவே, பெர்சிவல் (Rev. Peter Percival) அவர்களின் பெயராலும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் T கூறும் அகராதி யொன்றுள்ளது. இது, An English - Tamil Dictionary எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.