பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36



கொண்டுள்ள சொற்கள் அனைத்துமே ககர எதுகைச் சொற்களாம். மனவு, தனி, முனை, இனம்-என்பன போல, ‘ன’ தொடங்கி ‘ளெை’ வரையும் உள்ள எழுத்துக்களுள் எந்த எழுத்தையாவது இரண்டாவது எழுத்தாகக் கொண்டுள்ள சொற்கள் அனைத்துமே ‘னகர எதுகைச் சொற்கள்’ எனப்படும். இங்கே காட்டிய சொற்கள் எல்லாம் சூடாமணி நிகண்டிலிருந்து எடுக்கப்பட்டவையே. இப்படியாக, சூடாமணியியற்றிய மண்டலபுருடர், ககர எதுகை, ஙகர எதுகை, சகர எதுகை, ஞகர எதுகை, டகர எதுகை, ணகர எதுகை, தகர எதுகை, நகர எதுகை, பகர எதுகை, மகர எதுகை, யகர எதுகை, ரகர எதுகை, லகர எதுகை, வகர எதுகை, ழகர எதுகை, ளகர எதுகை, றகர எதுகை, னகர எதுகை-எனச் சொற்களைப் பதினெட்டு எதுகை வகைகளாகப் பிரித்துக்கொண்டார்; ககர எதுகைச் சொற்களை முதலாவதாகவும், ஙகர எதுகையை இரண்டாவதாகவும், சகர எதுகையை மூன்றாவதாகவும், இப்படியே வந்து...... னகர எதுகைச் சொற்களைப் பதினெட்டாவதாகவும் அமைத்துவிட்டார். இதுவே ஒருவகை அகராதி முறைதானே.

சூடாமணி நிகண்டில் ஒரு சொல்லைத் தேட வேண்டுமானால், அச்சொல்லின் இரண்டாவது எழுத்து என்ன என்று நோக்கி, அதற்குரிய எதுகைப் பகுதியில் சென்று பார்த்தால் கிடைத்துவிடும். இக்கால அகராதி முறையேபோல இஃதும் ஒருவகை வசதிதானே. சூடாமணி நிகண்டு 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டதாகச் சிலரும், அதற்கு முன்னமேயே இயற்றப்பட்டுவிட்டதாகச் சிலரும்