பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401

401

அகராதிச் சுருக்கம் தமிழ் பாக்கெட் அகராதி (Tamil Pocket Dictionary) என அழைக்கப்படும் இவ்வகராதி தமிழுக்குத் தமிழால் பொருள் கூறும் சுருக்கமான ஓர் அகராதியாகும். மாணவர்க்குப் பயன்பட வேண்டும் என்னும் நோக் குடன் இது கையடக்கமாக 'பாக்கெட் சைசு' என்னும் அளவில் வெளியிடப்பட்டது. இதில் 3000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் தலைப் பிலும், ஒவ்வொரு குறள் அமைக்கப்பட்டிருப்பது இவ் வகராதிப்பதிப்பில் உள்ள ஒரு சிறப்பாகும். இவ்வக ராதி திரட்டியவர் C. விசயரங்க முதலியார். காலம்

கி.பி. 1883.

விசுவநாதபிள்ளை தமிழ் - ஆங்கில அகராதி

A Dictionary Tamil And English என்ற பெயருடைய இவ் வகராதியைத் திரட்டியவர் V.விசுவநாதப் பிள்ளை என்பவர், காலம் கி.பி. 1888.

தரங்கம்பாடி அகராதி தரங்கம்பாடி சங்கத்தாரால் கி.பி. 1897-ஆம் ஆண்டில் தோற்ற மெடுத்த இவ்வகராதி தமிழுக்கு ஆங்கிலத்தால் பொருள் கூறுவதாகும். இது ஃபாபிரி சியஸ் அகராதியை ஆதாரமாகக் கொண்டது. இதிலும், வினைப் பகுதியும் அதிலிருந்து உருவாகும் வினையுரு வங்களும் வின்சுலோ அகராதியில் உள்ளதுபோல் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 33,000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்பு 'பெப்சனெர்சு' (Rev. H. Beisenherz) என்பவரால் 1910 - ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 'பெக்செல்'