பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407

407

நான்கு தொகுதிகளுடன் மிகப் பெரியதாக உள்ளது; எங்கோ சில விடங்களில் சொல்லால் பொருள் விளக்குவ தல்லாமல் படங்களும் கொடுக்கப்பட்ட டுள்ளமை இவ்வகராதிக்கு ஒரு தனிச் சிறப்பு. சொல்லால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத பொருள்களைப் படத்தின் துணைகொண்டு புரிந்து கொள்ளலாமல்லவா? இதன் ஆசிரியர் : P. இராம நாதன், B.A., M - R.A.S., F.R.H.S. அவர்கள். காலம் 1909.

ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி The School Dictionary English-English Tamil என்னும் பெயருடைய இது, ஆங்கிலத்துக்கு ஆங்கிலத். தாலும் தமிழாலும் பொருள் கூறும் அகராதி. தொகுப்பாளர் டி. ஏ. சுவாமிநாத ஐயர். காலம் 1909.

06

அபிதான சிந்தாமணி தமிழ் மொழியில் தோன்றிய முதல் கலைக் களஞ்சியம் (Encyclopaedia) அபிதான சிந்தாமணி யாகும். இஃது, தனித் தனிச் சொல்லுக்குத் தனித் தனிச் சொல்லால் பொருள் கூறும் மற்ற அகராதிகளைப் போன்றதன்று. கடவுள்கள், முனிவர்கள், அரசர்கள், புலவர்கள், நூற்கள், பறவை - விலங்குகள் முதலிய பல்வகைப் பெயர்களை அகரவரிசைப்படுத்தி விரிவாக விளக்கம் கொடுத்திருக்கும் நூல் இது. சில பெயர் களைப் பற்றிப் பல பத்திகளும், சில பெயர்களைப் பற்றிக் கட்டுரை யமைப்பில் பல பக்கங்களுங்கூட எழுதப்பட்டுள்ளன. சிறப்புடைய யாராவது ஒருவரைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றியோ விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் மானால் இந்நூலின் துணையை நாடலாம்.