பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409

409

மேலும் தம் கைவண்ணம் கூட்டி வண்ணக் களஞ்சியம் காஞ்சி - நாகலிங்க முதலியார் இவ்வகரா தியைப் புதிய வடிவில் அமைத்தார். இதிலும் நான்கு தொகுதிகள் உள்ளன. காலம் 1911.

பழமொழி பகராதி அகர வரிசையில் தமிழ்ப் பழமொழிகள் தரப்பட் டுள்ள இவ்வகராதியின் ஆசிரியர் சு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள். இது, சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலையில் 1913-இல் அச்சிடப்பட்டது.

இலக்கியச் சொல் அகராதி இது, கலித்தொகை, இராமாயணம், சிந்தாமணி, நிகண்டுகள் முதலிய இலக்கியங்களில் உள்ள இன்றி யமையாப் பெயர்ச் சொற்கள் அகரவரிசையில் பொருள் கூறப்பட்டிருக்கும் அகராதியாகும். இதன் ஆசிரியர் சுன்னாகம் (யாழ்ப்பாணம்) அ. குமாரசாமி பிள்ளை யவர்கள். அச்சான காலம் 1914.

ஆங்கிலம் - தமிழ் - ஆங்கில அகராதி Junior School Dictionary (English-Tamil-English) என்னும் பெயருடைய இவ்வகராதி, ஆங்கிலத்துக்குத் தமிழாலும் ஆங்கிலத்தாலும் பொருள் கூறும் அகராதி யாகும். ஆசிரியர் பி. என். சங்கர நாராயணப் பிள்ளை .

முதல் பதிப்பின் காலம் 1914.

தமிழ் மொழி யகராதி ( தமிழுக்குத் தமிழாய் 1918-இல் வெளியான இவ் வகராதி கா.நமச்சிவாய முதலியாரது முயற்சியின் வடிவமாகும்.