பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

410

.

.

விசாகப் பெருமாள் தமிழகராதி ( தமிழுக்குத் தமிழான இவ்வகராதி, விசாகப் பெருமாள் ஐயரது உழைப்பின் உருவமாகும்.

பைபிள் அகராதி (The Tamil Bible Dictionary) பைபிள் செய்திகள் அகரவரிசையில் தரப்பட்டுள்ள இத் தமிழகராதியின் ஆசிரியர் கிலேற்றன் ஏ. சி. (Clayton, A. C.) என்பவர். இது, சென்னை சி. எல். எஸ்.

அச்சகத்தில் 1923-இல் அச்சாயிற்று.

தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சியின் கீழ் வெளியான இவ் வகராதி, 'Tamil Lexicon' என்று ஆங் கிலத்திலும், 'சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி' என்று தமிழிலும் அழைக்கப்படும். இது தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறும் ஒரு தலை சிறந்த அகராதியாகும். தமிழர்கள் தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் அறிந்து கொள்ளப் பயன்படுவதோடு, ஆங்கிலம் தெரிந்த அயல் மொழிக்காரர்கள் தமிழ் கற்பதற்குப் பெருந்துணை புரிவது இவ்வகராதி. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதோடு, பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களாலும் எழுதப் பட்டுள்ளன. அந்த ஆங்கில எழுத்துக்களின் துணைகொண்டு, ஆங்கிலமறிந்தவர்கள் தமிழ்ச் சொற்களை எளிதில் திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க) முடியும். தமிழ் எழுத்துக்களுக்கேற்ப ஆங்கில எழுத்துக்களின் கீழும் மேலும் தக்க அடையாளம் இருக்கும். அ என்பதற்கு a என்பது; ஆ என்னும் நெடிலுக்கு a என்னும் எழுத்தின் மேல் சிறு கோடு ; ந என்பதற்கு N; ங என்பதற்கு N மேலே ஒரு புள்ளி ;