பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411

411

ண என்பதற்கு N கீழே ஒரு புள்ளி ; ன என்பதற்கு N கீழே ஒரு கோடு - இப்படியாக எழுத்துக்கள் தக்க முறையில் அடையாளப்படுத்தப்பட்டு, முகப்பில் அடையாள விவரமும் தரப்பட்டிருப்பதால், ஆங்கில மறிந்த அயலார் எளிதில் தமிழ்ச் சொற்களை ஒலிக்க முடியும்.

மற்றும் இவ்வகராதியில், தூய தமிழ்ச் சொற்கள் அல்லாத சொற்கள் - அதாவது - பிற மொழிகளில் லிருந்து தமிழுக்கு வந்த சொற்கள். * இந்த உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சொற்களின் வேர்ப் (Root) பகுதி இடையில் - இந்தச் சிறுகோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கூட்டுச் சொற்களின் உறுப்புக் களும் இடையிடையே சிறுகோடிட்டு ஆங்கில எழுத்துக்களால் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. இம் முயற்சிகள் தமிழ்கற்பார்க்கு மிகவும் பயனுடையவை யன்றோ ? மேலும், இவ்வகராதியில் சிலவிடங்களில் குறிப்பிட்ட தமிழ்ச் சொல், மலையாளம், கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் அதே உருவத்தில் - அல்லது - சிறிது திரிந்த உருவத்தில் வழங்கப்பட்டு வருவதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இது, ஒப்பியல் மொழியாராய்ச்சியாளர்க்கு நல் விருந்து.

இவையேயன்றி இவ்வகராதியில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, ஒரு சொல்லுக்குரிய பொருள் கொடுக்கப்பட்டதும், அதன் பக்கத்திலேயே, இந்தச் சொல் இதே பொருளில் இன்ன நூலில் எடுத் தாளப்பட்டுள்ளதென நூல் மேற்கோளும் கொடுக்கப் பட்டுள்ளது.

6