பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

412

0

பல்துறைக் கலைநூற்களிலுள்ள சொற்களேயல் லாமல், உலகியல் வழக்குச் சொற்களும் இவ்வகராதி யில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. அவற்றின் பக்கத் தில் உலக வழக்குச் சொல் என்ற அறிவிப்பும் கொடுக் கப்பட்டிருக்கிறது.

மிகமிக நீளமும் அகலமும் உடைய தாளில் ஏறக் குறைய 4000 (நாலாயிரம்) பக்கங்களுடைய இப் பேரகராதி ஆறு (Volumes) பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பெரும் பிரிவிலும் பல உட்பிரிவு கள் (Parts) உள்ளன. ஆறு பெரும் பிரிவுகளிலும் மொத்தம் இருபத்தைந்து உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொர் உட்பிரிவும் தனித்தனி நூலாக அச்சிடப் பெற்றது. முதல் உட்பிரிவு 1923 ஆம் ஆண்டிலேயே அச்சு தொடங்கப்பட்டு 1924-இல் தான் முடிவுற்று வெளியாகியது. இப்படி ஒவ்வோர் உட்பிரிவும் அச் சாகிக் கொண்டுவர, இறுதி உட்பிரிவு 1936- இல் தான் அச்சாகி முடிந்தது. ஆக, 1923-இல் அச்சு தொடங்கப் பட்ட இவ்வகராதி 1936 - இல் தான் முழு உருவம் பெற்றது. இப்பேரகராதியில் 1,04,405 சொற்கள் பொருள் விளக்கப்பட்டுள்ளன.

இந்த இருபத்தைந்து பிரிவுகளில் அடங்காமல் விடுபட்ட 20,000 சொற்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டுத் தொகுக்கப்பட்டன. அவையும் அகரவரிசையில் பொருள் விளக்கப்பட்டு, மூன்று பாகங்களாக்கப்பட்டு, பிற்சேர்க்கைத் தனிப் பதிப்பாக (Supplement Edition) 1938- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.

பன்னூறாயிரம் ரூபாய் செலவிட்டுக் கொண்ட இவ் வகராதி தோன்றின் வரலாறும் தெரிய வேண்டு மல்லவா? இப்படியொரு தமிழ்ப் பேரகராதி தோற்று