பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

416 ஆனந்த விகடன் சித்திரப்போட்டி அகராதி

இஃது, ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துச் சித்திரப் போட்டியில் ஈடுபட்டோர் பயன்படுத்தும் நோக்கத் துடன் உருவான அகராதியாகும். இதனைப் பொது வாக மற்றவரும் பயன்படுத்தலாம் என முன்னுரை யில் கூறப்பட்டுள்ளது. 2040 பக்கங்கள் உள்ள இவ்வகராதியின் காலம் 1935 ஆம் ஆண்டு.

இராமநாதன் ஆங்கிலத் தமிழகராதி ஆங்கிலத்துக்குத் தமிழால் பொருள் கூறும் அக ராதி. ஆசிரியர் பி. இராமநாதன் M: A. காலம் 1936.

மதுரைத் தமிழ்ப் பேரகராதி புலவர் பலரால் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதி களுடன் கூடிய இப் பேரகராதி இரண்டு பாகங்களாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 1229 பெரிய பக்கங்களும், இரண்டாவது பாகத்தில் 1058. பெரிய பக்கங்களும் உள்ளன. இதனை வெளியிட்டவர் : மதுரை இ.மா. கோபால கிருணக்கோன் அவர்கள்.

முதற்பதிப்பின் காலம் : 1937.

தமிழ் - சம்சுகிருத அகராதி இது, தமிழ்ச் சொல்லுக்கு சம்ஸ்கிருத எழுத்தா லான சம்ஸ்கிருதச் சொல்லால் பொருள் கூறும் அகராதி. இதன் ஆசிரியர் கே.ஈ. வேங்கடேச சர்மா அவர்கள். சென்னை பியர்லெஸ்" அச்சுக்கூடத்தில் ஈசுவர ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பதிப் பிக்கப்பட்டதாக நூலின் முன்னுரை கூறுகிறது. எப்போது வந்த ஈசுவர ஆண்டெனில், கிடைத்துள்ள