பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

418

வடசொல் அகரவரிசைச் சுருக்கம் தி. நீலாம்பிகையம்மையாரால் இயற்றப்பட்டதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடசொல் தமிழ் அகர வரிசை என்னும் அகராதியின் சுருக்கமே இவ்வகராதி யாகும். குறிப்பிட்ட சில வட சொற்கள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்புக்கூட 1938-இல் தமிழ்ப்பாதுகாப்புக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி

இவ்வ கராதி, An Etymological And Comparative Lexicon of the Tamil Language என முதலில் ஆங்கிலத் தில் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் : இலங்கையில் தலைசிறந்த பேரறிஞரான ஞானப்பிர காச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, O.M.I.) ஆவர். இதன் அச்சுத் தொடக்க ஆண்டு 1938 ஆகும். இவ் வகராதியின் சிறப்புக்கள் சொல்லி முடியா!

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி யின் (Tamil Lexicon) சிறப்புக் கூறுகளுள் பல அமைந் திருப்பதோடு, மேலும் சொற்பிறப்பும் மொழி ஒப்பிய லும் விரிந்த அளவில் கூறப்பட்டிருப்பது இவ்வக ராதிக்குத் தனிச்சிறப்பாகும். அதாவது, - தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லா லும் பொருள் கூறப்பட்டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக் கொண்ட ஒரு சொல், எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப்பட்ட டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல், மற்ற இந்திய மொழி களிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ஒத்த நிலையில் வழங்கப்படுகிற அவ் வ ம் மொழியுருவங்களும்