பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

426

காலக் குறிப்பு அகராதி காலங்களின் விளக்கக் குறிப்பாகிய இந்த அக ராதியின் ஆசிரியரும் ந. சி. கந்தையா பிள்ளை யவர்களே.

சங்கர் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழகராதி

The Shankar Dictionary எனப்படும் இது, ஆங் கிலத்துக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவது. ஆசிரியர் A.M.S. ராகவன், B.A., L.T. ஆண்டு 1952.

கழக ஆங்கிலத் தமிழ்க் கையகராதி ஆங்கிலத்துக்குத் தமிழான கையடக்க முள்ள இவ்வகராதியின் ஆசிரியர் கா. அப்பாதுரை பிள்ளை MA., L.T. அவர்கள். இது, சென்னை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் 1952- இல் பதிப்பிக்கப் பட்டது.

கழகப் பழமொழி அகர வரிசை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1952 - இல் வெளியிடப்பட்ட இவ்வகராதியில், 10683 தமிழ்ப் பழமொழிகள் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இது நல்ல முயற்சி. பழமொழிகளைப் பற்றி யறிய விரும்பு வோர்க்கு இது ஒரு பெருங்கண்ணாடியாகும். மாதிரிக் காக, இந்நூலிலுள்ள முதல் பழமொழியும் இறுதிப் பழமொழியும் வருமாறு:

(1) அகங்குளிர முகம் மலரும். (10683) "'வெளவின பேர்க்கு முடிவது சுருக்கு.