பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

428

குறிப்பிட்ட ஒரு சொல் உலகப் பெருநூலாகிய திருக்குறளில் இருக்கிறதா எனக் கண்டறியவும், அப்படியிருப்பின் அது திருவள்ளுவர் காலத்தில் நூல் வழக்கில் இருந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ள வும், திருக்குறள் ஆட்சியைக் கொண்டு அச்சொல் லுக்கு இன்ன - அல்லது இன்னின்ன பொருள் உண்டு என வரையறுக்கவும் இவ்வெளியீடு பெருந்துணை புரி யும். எனவே, திருக்குறள் ஆராய்ச்சியாளர்க்கும் மொழியாராய்ச்சியாளர்க்கும் கால ஆராய்ச்சியாளர்க் கும் ஒரு சேரப் பயனளிப்பது இந்நூல் என்று துணிந்து கூறலாம். மாதிரிக்காக 'அகம்' என்னும் சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது வருமாறு:

அகம் (ஒன் . பொ. பெ.) = நெஞ்சம் 277,298,708, 787, 830. [அகப்பட்டி = (தன்னிற் )) சுருங்கிய பட்டி] (ப.தொ). 1074. வையகம், வானகம்) (ஒன் இட.) = இடம் 101,547, 1055.

சுருக்கக் குறியீடுகளின் விளக்கங்களை நூலின் முன்னுரையில் கண்டுகொள்க.


கலைக் களஞ்சியம்


Tamil Encyclopaedia அபிதான சிந்தாமணியை ஒரு சார் சிறு தமிழ்க் கலைக் களஞ்சியம் எனலாம். ஆனால், இந்தக் 'கலைக் களஞ்சியம்' என்னும் படைப்பே, உண்மையில் முழுமை பெற்ற முதல் தமிழ்க் கலைக்களஞ்சியம் (Tamil Encyclopaedia) ஆகும். அபிதான சிந்தாமணி யில், புராண இதிகாச - காவிய - இலக்கிய இலக்கண - நூற்கள் சார்பான சில்துறைக் கலைச் செய்திகளே ஒரளவு விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்தக் கலைக் களஞ்சியத்திலோ , அபிதான சிந்தாமணியில் உள்ளன