பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/44

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40



இந்தத் தொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! ஒருவேளை, ‘அகர முதல்’ என்னும் தொடரின் துணை கொண்டே ‘அகராதி’' என்னும் பெயரை அமைக்க இரேவண சித்தர் கற்றுக்கொண்டிருந்தாலும் இருக்கலாம்

டும்-டும்-டும்-டும்

“வாலு போச்சு கத்தி வந்தது டும் டும். கத்தி போச்சு மாங்காய் வந்தது டும் டும்- மாங்காய் போச்சு சோறு வந்தது டும் டும்-சோறுபோச்சு மேளம் வந்தது டும் டும் டும் டும்”- என்ற கதையே போல, உரியியல் என்னும் பெயர் போய் உரிச்சொல் என்னும் பெயர் வந்தது. உரிச்சொல் போய் நிகண்டு வந்தது-நிகண்டு போய் அகராதி வந்தது - இப்போதோ அகராதிக்குப் பதிலாக ‘அகர வரிசை’ என்னும் பெயர் வந்து கொண்டிருக்கிறது. வடமொழியிலுங்கூட, நிகண்டு அபிதானம், கோசம், நாமமாலை என்னும் பெயர்கள் மாறி மாறி அகராதித் துறை நூற்களைக் குறித்தன. ஐரோப்பிய மொழியிலுங்கூட இப்படித்தான்! பல பெயர்களைக் கடந்த பின்னரே ஆங்கிலத்தில் Dictionary என்னும் பெயர் இப்போது நடை முறையில் இருந்து வருகிறது. Dictionary என்னும் பெயருக்கு முன் இருந்த பெயர்கள் பின் வருமாறு:—

Nominale (பெயர்ப் புத்தகம்), Medulla grammatices (இலக்கணத் தோழன்), ortus Vocabulorum (சொற்களின் தோட்டம்), Promptorium Parvulorum (சொல்லெடுத்துக் கொடுப்ப்போன்), Catholicon Anglicum, Manipulus Vocabulorum (கையடக்க அகராதி), Alvearie (சொற்களின் தேன் கூடு), Abecedarium (ஆரம்ப ஆசிரியன்), Bibliotheca (சொல் நூல் நிலையம்), Thesaurus (சொற்-