பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441

441

என்னும் பேரகராதியைப் படைத்த சென்னைப் பல்கலைக் கழகமே, இந்த ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியத்தையும் உருவாக்கியது. ஆங்கிலச் சொற் கட்கும் பெருவழக்கிலுள்ள சொற்றொடர்கட்கும் இயன்றவரை தூய தமிழ்ச் சொற்களாலும் தொடர் களாலும் பொருள் கூறுகிறது இவ்வகராதி. ஆங்கிலச் சொற்கட்கு நேரான நல்ல தமிழ்ச் சொற்களைத் தந் திருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

இப்படியொரு சிறந்த அகராதி படைக்க வேண்டு மென்று சென்னைப் பல்கலைக் கழக 'சிண்டிகேட்' அவை யானது, 1955 அக்டோபர் 27 -ஆம் நாள் கூட்டத்தில் தீர்மானித்தது. இதற்காகச் சூழ்வினைக் (ஆலோசனைக்) குழுவும் ஆசிரியர் குழுவும் ஏற்படுத்தப்பட்டன. ஆசிரியர் குழுவின் தலைவராக திரு. அ. சி. சிதம்பர நாதச் செட்டியார் அமர்த்தப்பட்டார். 1959 மார்ச்சு 16.

ஆம் நாள் வேலை தொடங்கப் பெற்றது.

இவ்வகராதி மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக் கப்பட்டுள்ளது. முதல் பாகம் 1963 - இலும், இரண்டாம் பாகம் 1964 - இலும் வெளியிடப்பட்டன. மூன்றாம் பாகம் 1965 - இல் முடிவடைந்தது.

தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞருள் ஒருவரான டாக்டர். அ. சிதம்பரநாதச் செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்ட பயன் மிக்க இவ்வகரா தியின் மாதிரிக்காக, 'arch' என்னும் ஆங்கிலச் சொல், பெயர்ச் சொல்லாகவும் (n = noun), குறிப்புப் பெயரெச்சம் மாகவும் (a - adjective), வினைச் சொல்லாகவும் (v= verb) நின்று தரும் பொருள்கள் முறையே வருமாறு: