பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

444

இலக்கியங்களின் இறுதியில், அவ்வந் நூலிலுள்ள அருஞ்சொற்களையும் சிறப்புப் பெயர்களையும் திரட்டி அகரவரிசைப் படுத்திச் செய்யுள் எண்ணுடன் தந்துள் ளார்கள். மற்றும் ஐயரவர்கள், குறுந்தொகையின் தொடக்கத்தில் பாடினோர் வரலாற்றையும், புற நானூற்றின் தொடக்கத்தில் பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, சிறப்புச் செய்திகள் முதலிய வற்றையும் அகர வரிசையில் தந்துள்ளார்கள். இம் முன்னோடி முயற்சி, பின்னவர்க்குப் பெரிய வழிகாட்டி யாகும்.

ஐயரவர்களைப் போலவே, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் போன்றவர்களும் தத்தம் நூற் பதிப்புக்களின் இறுதியில் அருஞ்சொல் அகர வரிசை, சிறப்புப் பெயர் அகர வரிசை முதலானவற்றைச் செய் யுள் எண்ணுடன் தந்து வருகின்றனர்.

சமாசப் பதிப்பு

சென்னை - சைவ சித்தாந்த மகா சமாசத்தினர் 1940- ஆம் ஆண்டில், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனப்படும் சங்ககால மேற்கணக்கு நூற்கள் பதினெட் டினையும் சங்க இலக்கியம்' என்னும் தலைப்பில் வெளி யிட்டுள்ளனர். அவர்கள் அப்பதிப்பின் இறுதியில், சிறப்புப் பெயர் அகராதி, புலவர்கள் அகராதி , அரசர்கள் அகராதி முதலியன கொடுத்திருப்பது கூட ஒரு பெரிய செயலன்று; அவர்கள் அந்தப் பதி னெட்டுச் சங்க நூற்களிலுமுள்ள மொத்தம் 2381 செய் யுட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அமைத்திருப்பதே ஒரு வகை அகராதி முறையை ஒட்டித்தான். அவர்கள் அந்த 2381 செய்யுட்களையும் நூல் வாரியாக அமைக்க வில்லை; அவற்றைப் பாடிய புலவர் வாரியாகவே