பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449

449

சேர்க்கைகளின் வாயிலாகவே ஒருவர்க்கொருவர் கருத் தறிவித்திருக்கவேண்டும். பின்னரே நாளடைவில் மொத்தையான ஒலித்திரளிலிருந்து தனித் தனியாகச் சொற்கள் பிரிவினை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கும் வெகு காலத்திற்குப் பின்னரே, ஒவ்வொரு சொல்லின் ஒலியையும் பல கூறுகளாகப் பிரித்து ஒவ் வோர் ஒலிக் கூற்றிற்கும் ஒவ்வோர் எழுத்து கண்டு பிடித்து மொழிக்கு வரிவடிவம் உண்டாக்கினர்

அறிஞர்.

'அணில்' என்னும் சொல்லை எடுத்துக் கொண்டால், அ - ணி - ல் என்னும் மூன்று எழுத்துக்களும் உண்டான பின்புதான் சொல் உண்டாயிற்று என்று எவரும் சொல்லார்; அவ்வாறு சொல்லினும் தவறு; ஏனெனில், இன்னும் எழுத்துருவம் பெறாமல் பேச்சளவில் மட்டும் உள்ள மொழிகள் உலகில் எத்தனையோ உள்ளன. எழுதும் மொழிகட்குள்ளுங்கூட, மராத்தி, இந்தி, முத லிய வட இந்திய மொழிகட்குத் தனி எழுத்தின்மை யால் சம்ஸ்கிருத மொழியின் எழுத்தினாலேயே அவை எழுதப்படுகின்றன. ஆங்கிலம், செர்மனி, பிரெஞ்சு முதல் லிய ஐரோப்பிய மொழிகட்கும், மலாசியாவில் வழங்கும் மலாய் முதலிய தென் கிழக்கு ஆசிய மொழிகட்கும், ஆப்பிரிக்க மொழிகள் சிலவற்றிற்கும் சொந்தமாகத் தனி எழுத்தின்மையால் அவையெல்லாம் இலத்தீன் மொழியின் (a,b,c,d முதலிய இருபத்தாறு) எழுத்துக் களினாலேயே எழுதப்படுகின்றன.

மேலுள்ள பல எடுத்துக்காட்டுகளிலிருந்து, மொழி யில் சொற்றொடர்களும் வாக்கியங்களும், அவற்றின் உறுப்பாகிய சொற்களுமே முந்தியவை; சொற்களின் உறுப்பாகிய எழுத்துக்கள் பிந்தியவையே என்னும்