பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451

451

தனக்குரிய பொருள் மதிப்பைப் பெறுகிறது. மற்றும், 'அணில் மரத்தில் கடிது ஓடுகிறது' என்னும் வாக்கி யத்தில் அணில் என்னும் சொல் பொருள் மதிப்பு பெறுவதோடு, அடுத்துள்ள மரம் என்னும் பெயர்ச் சொல்லும் அதனோடு இணைந்துள்ள அத்து, இல் என் னும் இடைச் சொற்களும், அடுத்துள்ள 'கடிது' என் னும் உரிச்சொல்லும், அடுத்துள்ள ஓடு என்னும் வினைச் சொல்லும் அதனோடிணைந்துள்ள கிறு, அ, து என்னும் இடைச்சொற்களுங்கூடத் தத்தமக்குரிய பொருள் மதிப்பைப் பெறுகின்றன. இவற்றைத் தனித்தனியே சொன்னால் ஏது பொருள் மதிப்பு? இதனால்தான், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், தனித் தனிச் சொற்களைத் தந்து, சொந்த வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தும்படி மாணவரைக் கோருகின் றனர். வாக்கியமாகச் சொல்லும்போது அவ்வாக்கியத் திலுள்ள தனித் தனிச் சொற்களின் பொருள் தன்னில் தானே தெளிவாக விளங்குவதால், அதற்குத் 'தன் பொருளைத் தானே விளக்கும் வாக்கியம்' எனப் பெயர் சொல்லப்படுகிறது.

இந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பில் அ, ஆ, இ, ஈ என முதலில் வெற்று எழுத்துக் களைக் கற்பிப்பதில்லை; 'அ' என்னும் தனி எழுத்தை 'அணில்' என்னும் சொல்லின் வாயிலாகவே கற்பிக் கின்றனர் ஆசிரியர்கள். அணில் என்னும் சொல்லைக் கூட, அணிலைப் பார்த்திருக்கிறாயா? அது எங்கே வசிக்கும்? அது என்ன செய்யும்? அது என்ன உண் ணும்? என்பன போன்ற வாக்கியங்களின் வாயிலாகவே அறிமுகப்படுத்துகின்றனர். அதாவது, முதலில் அணி லைப் பற்றி வாக்கியமாகப் பேசுவார்கள்; பின்னர், வாக்கியத்திலிருந்து அணில் என்னும் சொல்லைத்