பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42



சொற்கட்குப் பொருள் கூறும் வேலை மட்டுமே அகராதித் துறையில் நடந்து வந்தது; பின்னரே பல்துறைக் கலையகராதிகள் தோன்றலாயின. அவையும் அகர வரிசை முறையில் அடுக்கப்பட்டபோது அகராதித் துறையானது ‘அகராதிக் கலை’ என்னும் சிறப்புப் பெயருக்கு உரியதாயிற்று.

இத்துறை நூற்கள் அகராதி என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாலும், இந்த அகராதி என்னும் பெயரை முழுப்பெயராகக் கொள்ளமுடியாது; அதாவது,—அகராதி என்றால் அகர வரிசையில் தொடங்குவது என்று மட்டுந்தான் பொருள். அகர வரிசையில் தொடங்கி என்ன செய்கிறது என்பதை இந்த அகராதி என்னும் பெயர் விளக்கவில்லை. அகர வரிசையில் தொடங்கிப் பொருள் விளக்கும் நூல் என்று நாம் பெயர் விளக்கம் செய்துகொள்ள வேண்டும். எனவே, அகராதி என்னும் பெயரை ஒரு முதற்குறிப்புப் பெயராகக் கொள்ள வேண்டும்.

எப்படியோ அகராதி என்னும் அருமைப் பெயர் கிடைத்துநிலைத்துவிட்டது. முதல் உலக அகராதியாக 1594 இல் தோன்றி அகராதி என்னும் பெயரைத் தமிழர்க்குக் கற்றுக்கொடுத்த அகராதி நிகண்டு என்னும் நூலில், முதலெழுத்தைப் பொறுத்த மட்டுமே சொற்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன; இரண்டாவது - மூன்றாவது முதலிய எழுத்துக்களைப் பொறுத்தும் சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்படவில்லை. இக்குறையை ஓரளவு போக்கும் முறையில், அகராதி நிகண்டிற்கு நூறாண்டு பின்தோன்றிய ‘அகராதி மோனைக்கு அகராதி எதுகை’ என்னும் நூலில், அகம், அகப்பை,