பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457

457

வாக அறிவிக்கத் துணை புரிந்துள்ளன. இந்த இடைச் சொற்களைத் தனியாகக் கூறும்போது இவற்றிற் குப் பொருள் இல்லையாதலின் பெயர்வினைபோல் இவற் றைச் சிறந்த சொல் வகையாகக் கொள்ளாமல் இரண் டாந்தர வரிசைக்குத் தள்ளிவிட்டனர் இலக்கண நூலோர். பெயருக்கும் வினைக்கும் பின்னால் அமைந் திருப்பதே, இடைச்சொல் பெயருக்கும் வினைக்கும் பிற் பட்டது என்று கூறச் சான்றாகப் போதும்.

அடுத்து நான்காவது உரிச்சொல். கறுப்பு, சிவப்பு, மிகுதி, முழுமை முதலிய பண்புகளைக் குறிக் கும் உரிச்சொற்கள், முதற்கால மாந்தரின் பேச்சு வளம் பெற வளம்பெறவே - நாகரிகம் வளரவளரவே தோன்றி யிருக்க முடியும். குழந்தைகளும் பண்புகளை அறியக் காலம் பிடிக்கிறதன்றோ ? எனவே தான், இறுதியாக - நான்காவதாக உரிச்சொல் நிறுத்தப்பட்டது. மற்றும் 'சிவப்புக் (கோபக்) கண்கள்,' 'சாலப் (மிகுதியாகப்) பேசினான்' என உரிச்சொல் பெயர் வினையைச் சார்ந்தே வருதலின், உரிச்சொல்லைப் பெயர் வினைபோல் சிறப்புச் சொல்லாகக் கொள்ளாமல் இரண்டாந் தரமாகவே கருதினர் இலக்கண நூலோர். எனவே, தொல்காப் பியரும் நன்னூலாரும் சொற்களை யமைத்துள்ள வைப்பு முறையின் பொருத்தம் இப்போது இனிது புலனாகலாம்.

முதற்கால மக்களின் மொத்தமான ஒலித்தொகுப்பி லிருந்து பெயர், வினை முதலிய சொற்கள் பிரிந்து பிறந்த வரலாறு இதுகாறுங் கூறப்பட்டது. இந்தக் கருத்து இன்னும் சிலருக்குச் செரிமானம் ஆகவில்லை யென்றால், அவர்கட்கு மேலுஞ் சில சான்றுகள் தர வேண்டும் :