பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

462

காண்க. ஒரே பொருளைக் குறிக்க ஒவ்வொரு மொழி யிலும் ஒவ்வொருவிதமான - அதாவது - வேறுபட்ட ஒலிக்கூறு (சப்தம்) இருப்பதை ஆராயுங்கால், 'மக்க ளினம் குறிப்பிட்ட ஒரே காரணம் பற்றிப் பொருள்கட் குப் பெயர் வைக்கவில்லை; ஏதோ ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் உளம் போன போக்கில் எழுப்பிய ஒலிகளே பெயர்களாக நிலைத்துவிட்டன' - என்னும் உண்மை புலனாகலாம்.

(3) குறிப்பிட்ட ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு பொருளைக் குறிப்பதற்கு உரிய காரணம் இன்னது, என்று யாரும் கணக்காகச் சொல்ல முடியாது என்று மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரே கூறிவிட்டார்:

" மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா. என்பது தொல்காப்பிய நூற்பா. எனவே, ஒரு சொல் லைக் கொண்டு, அதனால் சுட்டப்படும் பொருளைப் பற் றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாது என் பதும், பொருள்களைக் குறிக்கும் ஒருவகை அடை யாளங்களே சொற்கள் என்பதும் புலனாகும்.

(4) ஒவ்வொரு பொருளிலிருந்தும் தோன்றிய ஒலியையே அவ்வப் பொருளுக்குப் பெயராக நம் முன் னோர் இட்டனர்; எடுத்துக் காட்டாக, - காக்காவானது 'கா - கா' எனக் கத்துவதால் அவ்வொலிப் பெயரால் அழைக்கப்பட்டது; 'கிலு - கிலு' என ஒலிப்பதால் கிலு கிலுப்பைக்கு அப்பெயர் ஏற்பட்டது. மற்ற பொருள் கட்கும் இக்காரணம் பற்றியே பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஏதோ இரண்டொரு பொருளுக்குத் தவிர எல்லாப்