பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463

463

பொருள்கட்கும் இக்கருத்து பொருந்தாது. எல்லாப் பொருள்களும் தாம் அழைக்கப்படுகிற பெயரொலிகள் போல ஒலியெழுப்புவது கிடையாது. 'காக்கா' கொள் கையின்படியே பார்த்தாலும், தமிழில்தான் 'காக்கா என அழைக்கிறோம் - மற்ற மொழிகளில்...?

எனவே, அடிப்படை யமைப்பின்படி ஏறக்குறைய எல்லாப் பெயர்களும் இடுகுறிப் பெயர்களே என்பது மேலுள்ள ஆராய்ச்சியால் தெளிவாகும் ; ஆகவே, முதற்கால மக்கள் எக்காரணமும் கருதாமலேயே இயற்கையாக எழுப்பிய ஒலித் தொகுப்பிலிருந்தே தனித் தனியாகச் சொற்கள் பிரிந்து பிறந்தன என்னும் கருத்து உறுதியாகும் ; ஆகவே, சொற்றொடருக்குப் பிந்தியது சொல் என்னும் கொள்கை முற்ற முடிந்த முடிபாகும்.

சொல் பிறந்த கதை இதுதான்!